3வது திருமணம் குறித்து எழுந்த விமர்சனம்!! அமீர்கான் கொடுத்த விளக்கம்..
அமீர்கான்
பாலிவுட் நடிகர் அமீர்கான், கடந்த ஜூலை 5 ஆம் தேதி மும்பை பாந்திரா பகுதியுள்ளது அவரது இல்லத்தில் அழக்கலை நிபுணர் கெளரி ஸ்ப்ராட் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார். இதற்கு முன் அவர் ரீனா தத்தா, திரைப்பட இயக்குநர் கிரண் ராவ் ஆகியோரை தொஇருமணம் செய்து விவாகரத்து செய்தார்.
இதனையடுத்து அமீர்கானின் 3வது திருமணம் குறித்து மந்திரி நிதேஷ் ரானே, பிரபலங்கல் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது, இந்து சமூகம் குறித்து சிந்திக்க வேண்டும்.

அமீர்கானின் இந்த 3வது திருமணத்தை ஏன் லவ் ஜிகாத் என்று பார்க்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து தன்னுடைய விளக்கத்தை அமீர்கான் கூறியிருக்கிறார்.
அதில், நான் திருமணம் செய்து கொண்ட கெளரி, கிரண், ரீனா தங்கல் மதத்தை மாற்றிக் கொள்ளவில்லை. கெளரி இந்து கூட அல்ல, அவள் ஒரு கிறிஸ்தவர், என் சகோதரிகளும் இந்துக்களை திருமணம் செய்தார்கள், என் மகளும் ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளார என்று கூறியிருக்கிறார்.