61 வயதில் 3வது திருமணம் செய்யப்போகும் அமீர் கான்!! பொண்ணு யார் தெரியுமா?
அமீர் கான்!
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அமீர் கான், சமீபகாலமாக கவுரி ஸ்ப்ராட் என்பவருடன் காதலில் இருந்து வந்தார். ஏற்கனவே 2 திருமணம் முடிந்து விவாகரத்து செய்த அமீர் கான் வரும் ஜூலை 5 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

மும்பையில் அவரது திருமணம் எளிய முறையில் நடபெறும் என்றும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமீர் கான், ஜூலை 5 ஆம் தேதி நான் திருமணம் செய்யவுள்ளேன், எங்கள் இல்லத்திலேயே திருமணம் நடைபெறும். நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொள்வார்கள்.
எங்களுடைய திருமணத்திற்கு உங்களுடைய அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும். உங்கள் ஆசியுடன் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறே என்று தெரிவித்துள்ளார்.

கவுரி ஸ்ப்ராட்
அமீர் கான் திருமணம் செய்யவுள்ள கவுரி ஸ்ப்ராட், பெங்களூர்வை சேர்ந்தவர், லண்டனில் பேஷன், ஸ்டைலிங் படிப்பை முடித்துள்ள கவுரி, மும்பையில் சலூன் ஒன்றினை நடத்தி வருவதுடன், அமீர் கானின் தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார். கவுரிக்கும் 7 வயதில் மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Aamir Khan confirms July 5 wedding; says ceremony will be held at home with close family and friends. pic.twitter.com/EKNuE9bInL
— News Arena India (@NewsArenaIndia) July 3, 2026