திருமணமாகி 12 வருடங்களாக குழந்தையில்லை! உருகவைத்த பிக்பாஸ் ஆர்த்தி..

biggboss Aarthi engaveettuboss Ganeshkar tamilcomedy
By Edward Jan 07, 2022 08:26 AM GMT
Report

தமிழில் பல பெண் காமெடி நடிகைகள் உருவாகி பெரியளவில் பேசப்படாமல் இருப்பதுண்டு. ஆனால் அதை எல்லாம் உடைத்த நல்ல பேர் எடுத்தவர் நடிகை ஆர்த்தி. முன்னணி நடிகர்கள் படங்களில் சிறு ரோலில் நடித்து வந்த ஆர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.

இதையடுத்து ஒருசில படங்களில் நடித்து வந்தார். கடந்த 2009ல் நடிகர் கணேஷ்கரை திருமணம் செய்தார். தற்போது அவருடன் இணைந்து எங்கவீட்டு பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அங்கு தங்களுக்கு குழந்தை இல்லை என்ற வருத்தத்தை கூறி நெகிழ வைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. எனக்கு எப்பவும் என் கணவர் தான் குழந்தை என்று கூறிய வார்த்தைகள் அரங்கையே உருவவைத்துள்ளது.