கூட இருந்தே குழிப்பறிச்சாங்க..ஆர்யா கூடவா வேண்டவே வேண்டாம்!! நடிகை அபர்ணதி....
அபர்ணதி
கலர்ஸ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யாவை வைத்து ஒளிப்பரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது நடிகையாக பிரபலமாகி இருப்பவர் தான் நடிகை அபர்ணதி.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், 2018ல் சினிமா பயணத்தை தொடங்கினேன், 6-7 ஆண்டுகளில் நிறைய போட்டிகளை சந்தித்தேன்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பது தனக்கு சவாலாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கிறது. எனக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாக எந்த தகவலும் வரவில்லை என்றும் நிறைய பாய் பிரண்ட்ஸ் இருக்கிறார்கள் என்ற ரூமர்ஸ் பரவினால் நன்றாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
குழிப்பறிச்சாங்க
மேலும், என் தோழி ஒருவர் நடித்த படத்தின் பிரீமியர் ஷோவுக்கு நான் போயிருந்தேன். அடுத்த நாளே அந்த படத்தின் இயக்குநர் என் போன் நம்பர் கேட்டார். ஆனால் என்னை அந்த கதாபாத்திரத்திற்கு வேண்டாம் என்று வேறொரு நடிகையை அவர் பரிந்துரைத்ததாக எனக்கு தெரிய வந்தது.
Casting Couchக்காக யாரும் தன்னை தவறான எண்ணத்தில் அணுகியதில்லை. உடல் எடையை கூட்டவோ, குறைக்கவோ தான் வாய்ப்புகள் வந்ததாகவும், மற்றபடி எந்த கெட்ட எண்ணத்தொலும் தன்னை அணுகவில்லை என்று அபர்ணதி தெரிவித்துள்ளார்.
ஆர்யாவுடன் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, வேண்டவே வேண்டாம் ஆர்யா கூட நடிக்கவே மாட்டேன். அந்த நிகழ்ச்சியில் நடந்தது ஒரு நல்ல நினைவாக இருக்கட்டும், அதை வைத்து நான் ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த நினைவை கெடுக்க விரும்பவில்லை என்று ஓபனாக பேசியிருக்கிறார் அபர்ணதி.