6ya பெயரை மாற்றாத முன்னாள் காதலி! காதலை மறைக்கும் அபர்ணதி

jail arya Abarnathi gvprakashraj
By Edward Dec 28, 2021 07:31 AM GMT
Report

தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. சமீபத்தில் அவர் நடித்து வெளியான சார்பட்டா பரம்பரை நல்ல வரவேற்பு பெற்றது. ஆரம்பத்தில் பல தோல்விகள் அடைந்தாலும் திருமணத்தை தள்ளிபோட்டு வந்தார்.

பின் கஜினிகாந்த் படத்தில் ஜோடி போட்ட நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பு பெண் தேடும் நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளையில் ஹீரோவாக நடித்தார். 18 பெண்களில் மூன்று பெண்கள் இறுதிசுற்றுக்கு வர அதில் ஒருவராக இருந்தார் அபர்ணதி.

இதையடுத்து, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுடன் சேர்ந்து ஜெயில் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இதனை தொடர்ந்து ஒருசில படங்களில் கமிட்டாகியும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆர்யா மீது தீவிர காதலில் இருந்த அபர்ணதி தற்போது வரை ஆர்யாவை மறக்கவில்லை என்று இணையத்தில் காரணத்தோடு கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இதற்கு காரணம் நடிகர் ஆர்யாவின் பெயரை 6ya என்று தனது சமுகவலைத்தள பக்கத்தில் மாற்றாமல் இருந்து வருவதுதான்.

Gallery