காதலித்து திருமணம் செய்தும் 14 ஆண்டுகள் குழந்தை இல்லை..ஆனால்.. நடிகை அபிராமி எமோஷ்னல்..

Abhirami Tamil Actress Actress
By Edward Oct 26, 2024 11:30 AM GMT
Edward

Edward

in Celebrity
Report

அபிராமி

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை அபிராமி விருமாண்டி படத்திற்கு பின் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாவிட்டார்.

காதலித்து திருமணம் செய்தும் 14 ஆண்டுகள் குழந்தை இல்லை..ஆனால்.. நடிகை அபிராமி எமோஷ்னல்.. | Abhirami Open About Falling Love With Her Husband

தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அபிராமி, சமீபத்தில் கூட வேட்டையன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன் கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது, அதன்பின் 14 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தநிலையில் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தது குறித்தும் பேசியிருக்கிறார்.

என் கணவர் எனக்கு ஒரு நல்ல நண்பர், பள்ளி காலத்த்தில் இருந்தே என் கணவரை தெரியும். நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். அவருக்கு சினிமா, கிளாமர், புகழ் எல்லா விஷ்யங்களும் பெரிய ஈடுபாடு கிடையாது என்பதால் எப்போது வாழ்க்கையை எதார்த்தமாக பார்ப்பார்.

சில நேரங்களில் நான் தான் நம்ம ஒரு ஹீரோயின் என்ற ஒரு சிந்தனையோடு ஆகாயத்தில் மிதந்து இருந்தேன். அப்போது என்னிடம் நீங்க நிஜ வாழ்க்கைக்கு வாங்க, இந்த உலகம் வேறு மாதிரியானது என்று எனக்கு ஞாபகப்படுத்துவார்.

14 ஆண்டுகள் குழந்தை இல்லை

அப்படியே பேசிய அபிராமி, அவர் வெளிநாட்டு கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார், அவர் எனக்காக மட்டும் அங்கிருந்து இந்தியாவிற்கு வரவில்லை, எங்களுடைய முழு குடும்பத்திற்காகவும் இங்கு வந்துவிட்டார்.

காதலித்து திருமணம் செய்தும் 14 ஆண்டுகள் குழந்தை இல்லை..ஆனால்.. நடிகை அபிராமி எமோஷ்னல்.. | Abhirami Open About Falling Love With Her Husband

வெளிநாட்டில் நாங்கள் 14 ஆண்டுகளுக்கு மேல் இருந்தோம், அங்கு நான் அவருக்காக தான் இருந்தேன். தமிழ்நாட்டிற்கு வந்ததும் ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்று நினைத்தோம். வெளிநாட்டில் குழந்தையை தத்தெடுக்க முடியாது என்பதால் தமிழ்நாட்டிற்கு வந்ததால் எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.

கணவன் மனைவியாக இருக்கும்போது ஒருவருக்கொருவர் கணவன் மனைவியாக மட்டுமல்லாமல் நண்பர்களாகவும் இருக்க வேண்டும். உனக்கு என்ன தேவைப்படுகிறது? உன்னுடைய விருப்பம் என்ன? நீ ஏதாவது தனிப்பட்ட முறையில் சில விஷயங்களை விரும்புகிறாயா? உள்ளிட்ட பல கேள்விகளை இருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அபிராமி பேசியுள்ளார்.