கமல் சார் என்னை கூப்பிட்டா நோ சொல்ல மாட்டேன்!! நடிகை அபிராமி ஓப்பன் டாக்

Kamal Haasan Abhirami Tamil Actress
By Edward Jan 06, 2024 06:40 AM GMT
Report

தமிழ், தெலுங்கு மொழிகளில் 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை அபிராமி. அர்ஜுன், பிரபு, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அபிராமி கமல் ஹாசனின் விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்திழுத்தார்.

அதன்பின் சில காரணங்களாலும் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகி குழந்தை குட்டி என்று பார்த்துக்கொண்டார்.

தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் அபிராமிக்கு விருமாண்டி படத்தில் கமல் ஹாசன் கொடுத்த டார்ச்சர் தான் அவரை திருமணம் செய்து அமெரிக்கவில் செட்டிலாக காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் எடுத்த பேட்டுயில் விருமாண்டி 2 வில் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அபிராமி, அன்னலட்சுமி தான் செத்துட்டாளே? எப்படி பண்ண முடியும் என்று சிரித்தார்.

கமல் சார் மறுபடியும் பண்ணுவதாக இருந்தால், சமல் சார் என்னை கூப்பிடுகிற ஐடியா இருந்தால், அதற்கு நான் ஏன் நோ சொல்லப்போறேன் என்று அபிராமி கூறியிருக்கிறார்.