4, 5 நிமிஷத்துல அதை முடித்து விடுவேன்!! பிக்பாஸ் நடிகை அபிராமி ஓப்பன்..
நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். மாடலிங் துறையில் இருந்து நடிக்க ஆரம்பித்த அபிராமி பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.
அதன்பின் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஆல்பம் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பத்து நிமிடத்தில் தயாராக வேண்டும் என்றால் அது சேலையை தான் நான் தேர்வு செய்வேன் என்றும் அதுதான் எளிமையானது என்றும் தெரிவித்திருக்கிறார்.
சேஃப்டி பின்கள் இல்லாமலேயே நான் சில நிமிடத்தில் புடவையை கட்டி விடுவேன். கண்களுக்கு காஜல் ஐலைனர் தான் அதிகப்பட்ச மேக்கப் ஆக இருக்கும் எனக்கு எனவும் தெரிவித்திருக்கிறார்.
கால்க்ஷேத்ராவில் புடவை கட்ட தாமதமானால் கடுமையாக திட்டுவார்கள் என்றும் அதற்கு பயந்து தான் வேகமாக புடவையை கட்ட கற்றுக்கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
அதனால் இப்போது சேஃப்டி பின் இல்லாமல் 4 அல்லது 5 நிமிடத்தில் புடவையை கட்டிவிட முடியும் அப்படியொரு பழக்கம் இருக்கிறது என்று அபிராமி சாதாரணமாக கூறியிருக்கிறார்.