நடிகர் ராதாரவியை அசிங்கப்படுத்திய விஜய் தரப்பு.. சந்திப்பதையே நிறுத்தி விட்டாராம்!
ராதா ரவி
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ராதா ரவி. முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து இப்போது 40 வருடங்களாக சினிமாவில் கலக்கி வருகிறார்.
என்ன ஆனது?
இந்நிலையில் விஜய் குறித்து ராதா ரவி பேட்டி ஒன்றில் முன்பு பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், "என் பேரன் தீவிர விஜய் ரசிகர். தளபதி விஜய் உடன் போட்டோ எடுக்க வேண்டும் என பல வருடங்களாக கேட்டுக் கொண்டிருந்தார். அதனால் சர்க்கார் படத்தில் விஜய் உடன் நடித்தபோது அதற்காக விஜய்யிடம் அனுமதி கேட்டேன்.
அவரும் வர சொன்னதால் என் குடும்பத்தை விஜய்யை சந்திக்க அழைத்து சென்றேன். அங்கு ஷூட்டிங் முடியும் வரை காத்திருந்து பின் விஜய்யை சந்தித்து போட்டோ எடுத்து கொண்டு கிளம்பினோம்.
அதன் பின் ஒரு முறை விஜய்யை சந்திக்க வேண்டும் என விஜய்யின் மேனேஜரிடம் கேட்டேன்.
அப்போது, "நீங்க வந்து சந்திக்கலாம், ஆனால் முன்பு போல கூட்டத்தை கூட்டிட்டு வர வேண்டாம்' என விஜய் கூறினார். அவருக்கு தான் அது கூட்டம். ஆனால், எனக்கு அது குடும்பம்" என தெரிவித்தார் ராதா ரவி.