விஜய்யும் த்ரிஷாவும் ஒரே வீட்டில் இருக்காங்களா?பெட் ரூமை.. செய்யாறு பாலு ஆவேசம்!
த்ரிஷா - விஜய்
நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் விஜய் இணைந்து இதுவரை ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ளனர். இதை தொடர்ந்து கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடனமாடி இருந்தார்.
இவர்கள் இருவரையும் இணைத்து அவ்வப்போது பல கிசுகிசு பரவி வருகிறது. சமீபத்தில், விஜய்யின் பிறந்தநாளுக்கு லிஃப்ட்டில் விஜய்யுடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்து த்ரிஷா வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு பலரும் பல விதமாக பேச ஆரம்பித்தார்கள். மேலும் இரண்டு பேரும் ஒரே வீட்டில் தங்குகிறார்கள்; விஜய் அவரது மனைவி சங்கீதாவை பிரிவதற்கு இதுதான் காரணம் என பேச்சுகள் வர தொடங்கியது.
ஒரே வீட்டில் இருக்காங்களா?
இந்நிலையில் பிரபல பத்திரிகியாளர் செய்யாறு பாலு இது குறித்து காட்டமாக பேசியிருக்கிறார்.
அதில், " 40 வயதிற்கு மேல் ஒரு பெண் சினிமா துறையில் இருக்கிறார் என்றால் அது சாதாரணமான விஷயம் இல்லை. முக்கியமாக விஜய்யும், திரிஷாவும் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.
அவர்கள் குடும்பம் நடத்துகிறார்கள் என இஷ்டத்துக்கு பேசிவருகிறார்கள். அது உண்மை என்பதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? அது அவர்கள் பெர்சனல். கமல் கூறுவது போல் அடுத்தவர்கள் பெட் ரூமை ஏன் நீங்கள் எட்டி பார்க்கிறீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.