27 வயது மகன் இருக்கும்போது 57 வயது நடிகருடன் 24 வயது பெண் லிவ்விங்!! ஆனால் இப்போ...

Gossip Today Actors Babloo Prithiveeraj Tamil Actors
By Jai Apr 21, 2026 03:00 PM GMT
Report

பிரித்விராஜ்

1971-ல் நான்கு சுவர்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் பிரித்விராஜ். 1987ல் ஒரு தாயின் சபதம் படத்தில் முன்னணி ரோலில் நடித்தார் பப்லூ. இதன்பின் படங்கள், சீரியல்களில் நடித்து வந்த பிரித்விராஜ், 1994ல் பீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் 18 ஆண்டுகள் ஒன்றாக மகனுடன் வாழ்ந்த இருவரும் 2022ல் விவகரத்து பெற்று பிரிந்தனர்.

27 வயது மகன் இருக்கும்போது 57 வயது நடிகருடன் 24 வயது பெண் லிவ்விங்!! ஆனால் இப்போ... | Actor Age 57 Fall In Love With 24 Age Girl Now End

அதன்பின் மகனை பார்த்து வந்த பிரித்விராஜ், ஷீத்தல் என்பவரை காதலித்து வந்தார். 24 வயதே ஆன ஷீத்தலுடன் லிவ்விங் வாழ்க்கை வாந்து வந்த பிரித்விராஜை பலரும் விமர்சித்தனர். 33 வயது வித்தியாசம் என்றும் மகன் இருக்கும் போது இந்த வயசில் இதுதேவையா என்றும் கண்டபடியான விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருவரும் இணைந்து எடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.

மேலும் நான் ஷீத்தலை திருமணம் செய்வதில் அவள் குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால், அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பினார். இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் ஒரு கட்டத்திற்கு பின் தங்களின் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் இருந்து நீக்கி பிரிந்து சென்றனர்.

27 வயது மகன் இருக்கும்போது 57 வயது நடிகருடன் 24 வயது பெண் லிவ்விங்!! ஆனால் இப்போ... | Actor Age 57 Fall In Love With 24 Age Girl Now End

அதன்பின் ஷீத்தல், சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து ஷீத்தல் அளித்த பேட்டியொன்றில், எதையும் தீர்மானிக்காதீர்கள், அன்று சொன்னது தான் இன்றும் சொல்கிறேன். வயது என்பது வெறும் எண் தான். உங்களுக்கு பிடித்தால் சேர்ந்து வாழுங்கள், இல்லையென்றால் விலகிவிடுங்கள், எதையும் முன் தீர்மானம் செய்யாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.