10 பேர் என்னை அடிக்க வந்தார்கள்.. பிரபல நடிகரை காப்பாற்றிய அஜித்.. இப்படி ஒரு சம்பவம் நடந்ததா!!

Ajith Kumar Actors
By Kathick Nov 20, 2025 04:30 AM GMT
Report

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து மீண்டும் அதிக ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ளார்.

10 பேர் என்னை அடிக்க வந்தார்கள்.. பிரபல நடிகரை காப்பாற்றிய அஜித்.. இப்படி ஒரு சம்பவம் நடந்ததா!! | Actor Ajith Saved Bava Lakshman From Fans

விரைவில் AK 64 படத்தின் அப்டேட் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நடிகர் அஜித் திரையுலகில் உள்ள பலருக்கும் பல உதவிகளை செய்துள்ளார். இதை பத்திரிகையாளர்கள் அல்லது சம்மந்தப்பட்ட நபர்கள் பேட்டிகளில் கூறும்போது நாம் தெரிந்துகொள்வோம்.

இந்த நிலையில், ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டு நடிகர் பாவா லக்ஷ்மணை அஜித் காப்பாற்றிய சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி பாவா லக்ஷ்மணன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதில் "ஜனா பட படப்பிடிப்பு பார்டர் தோட்டத்தில் நடக்குது, 100 பேருக்கு மேல மொட்ட போட்டுட்டு வந்துட்டாங்க. நான் போய் சார் கிட்ட சொன்னேன். ஏண்டா மொட்ட அடிசீங்கன்னு கேட்டாரு, தல நீங்க மொட்ட போட்டீங்க அதான் நாங்க மொட்ட போட்டோம் சொன்னாங்க. சலிக்காமல் எல்லார் கூடவும் மேல கை போட்டு போட்டோ எடுத்தாரு. நான் ஒருத்தர் ஒருத்தரா விளக்கி விடுவேன்.

10 பேர் என்னை அடிக்க வந்தார்கள்.. பிரபல நடிகரை காப்பாற்றிய அஜித்.. இப்படி ஒரு சம்பவம் நடந்ததா!! | Actor Ajith Saved Bava Lakshman From Fans

அப்புறம் சார் சாப்பிட போய்ட்டாரு, நான் வந்துட்டே இருக்கேன் என்னனு தெரியல 10 பேர் என்ன அடிக்க வந்துட்டாங்க. நான் ஓடிப்போய் அஜித் சார் கிட்ட சொன்னேன். நீங்க என்ன பாக்க வந்தீங்க, பாத்தீங்க போட்டோ எடுத்தீங்க, அவர் அவரோட வேலைய செஞ்சாரு, அவரை ஏண்டா அடிக்க வரீங்க போங்கடானு சொன்னாரு, ஒரு வார்த்தை கூட பேசாம போய்ட்டாங்க" என கூறியுள்ளார்.