சூர்யாவும் வேண்டாம் அதர்வாவும் வேண்டாம்!! கடுப்பாகி இயக்குனர் பாலா கைநீட்டிய வாரிசு நடிகர்..
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி பிரபல இயக்குனராக திகழ்ந்தவர் பாலா. இவர் இயக்கிய நந்தா, பிதாமகன் படங்களில் போன்ற படங்களில் நடித்திருந்தார் சூர்யா, இவர்கல் மூன்றாவது கூட்டணியாக வணங்கான் படம் தயாரானது.

இதில் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார் . இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து கொண்டிருந்து போது திடீரென படத்திலிருந்து வெளியேறினார் நடிகர் சூர்யா.
படத்தின் கதை அம்சம் சரியாக இல்லாததனால் இதில் சூர்யாவிற்கு நடிக்க விருப்பம் இல்லை என பல தகவல் பரவி கொண்டிருந்தது.
அதர்வா..அருண் விஜய்
சமீபத்தில் இயக்குனர் பாலா, "வணங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேறுவதாகவும் இருந்தாலும் வணங்கான் திரைப்படம் ட்ராப் ஆகவில்லை" என்றும் ட்வீட் செய்திருந்தார். இதைதொடர்ந்து வணங்கான் படத்தில் சூர்யா நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்க போகிறார் என பல தகவல் வெளியாகின.
இந்நிலையில் இப்படத்தில் அருண் விஜய் நடிக்கப்போவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. இதன் மூலம் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் முதன்முறையாக நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.