அட்ஜெஸ்ட் பண்ணி இருங்க.. தெருநாய்கள் பிரச்சனை குறித்து நடிகை நிவேதா பரபரப்பு பேச்சு!
நிவேதா பெத்துராஜ்!
சினிமா, பேட்மிண்டன் விளையாட்டு, கார் ரேஸ் போன்றவற்றில் மிகவும் ஆர்வம் கொண்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா.
இவர் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் தெலுங்கிலும் சில ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தெருநாய்களை பாதுகாக்கக்கோரி சென்னை எழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலையில் ஹெவன் ஃபார் அனிமல்ஸ் என்ற என்ஜிஓ சார்பாக அமைதிப் பேரணி நடைபெற்றது.
ஓபன் டாக்!
இதில் நடிகை நிவேதா பெத்துராஜ், நடன இயக்குநர் ராபர்ட் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதில் நிவேதா பெத்துராஜ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், "தெரு நாய்கள் பற்றி மக்கள் மனதில் தேவையில்லாத பயம் ஏற்பட்டுள்ளது. தெரு நாய்களை பிடித்து அகற்றி காப்பகங்களில் அடைத்து வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

நாய்களுக்கு கிட்டதட்ட 2500 காப்பகங்கள் அமைக்க வேண்டும். அந்த காப்பகங்கள் அமைப்பதற்கு ஆகும் செலவு, பாராமரிப்பு செலவை, என்ஜிஓவிடம் கொடுத்து, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம்.
இந்த உலகத்தில் மனிதர்கள் மட்டும் தான் வாழ வேண்டும் என நினைப்பது சரியில்லை. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி இருங்க" என்று தெரிவித்துள்ளார்.