என்னையும் என் மனைவியும் விஷம் கொடுத்து கொல்லுங்கள்!! நடிகர் பாலா பரபரப்பு வீடியோ..
நடிகர் பாலா
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலா தமிழில் அன்பு, அப்பா அம்மா செல்லம், வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். 2010ல் பாடகி அம்ருதா என்பவரை திருமணம் செய்து ஒரு மகள் இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதனையடுத்து 2024ல் கோகிலா என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார். பாலாவின் முதல் மனைவி, பாலா மீது சில புகார்களை கூறி வழக்கு தொடுத்து வந்த நிலையில், பாலா ஒரு வீடியோவை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அதில், நான் படித்த காலத்திலிருந்த வாழ்க்கை வேறு, இப்போது நான் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறேன். திருமணமானதில் இருந்து பல விஷயங்களை வெளியில் சொல்ல முடியாமல் மனதில் வைத்துக்கொண்டு தான் இருந்தேன்.
சில உண்மைகளை சொல்லவெ முடியவில்லை, காரணம் நான் தான். சிலரை காப்பாறுவதற்காகவே பல விஷயங்களை வெளியே பேசவில்லை. மீடியாவில் நல்ல விஷயங்களும் வருகிறது, நல்ல செயல்களை வெளிச்சத்திற்கும் கொண்டு வருகிறார்கள். ஆனால் சிலர் வெறும் வியூஸ்களுக்காகவே சில பொய்யான விஷயங்களை பெரிதாக்குகிறார்கள்.

விஷம் கொடுத்து கொல்லுங்கள்
கடந்த சில ஆண்டுகளாக தன்னைச்சுற்றி தொடர்ச்சியாக வந்த கேஸ், பிரச்சனைகள், சர்ச்சைகள், தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்களால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இங்கே சட்டம் இருக்கிறதா? இந்த உலகத்தில் சட்டம் ஒன்று இருக்கா என்ற சந்தேகம் வருகிறது.
அப்படியென்றால் நான் என்ன செய்ய வேண்டும். இனி யாராவது என்னைப்பற்றி பேசினால், நான் சும்மா இருக்கமாட்டேன். அனைத்து பத்திரிக்கைகளையும் அழைத்து பிரஸ்மீட் நடத்தி எல்லா உண்மைகளையும் வெளியொல் சொல்லுவேன். இதை எழுதிக்கொள்ளுங்கள், இது நிச்சயம் நடக்கும், பலரும் என்னை அழைத்து பேசுகிறார்கள்.
உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன்பின் நீங்கள் பின்வாங்க முடியாது. இந்த உண்மை வெளிவரக்கூடாது என்றால் என்னையும் என் மனைவியையும் விஷம் வைத்து கொன்றுவிடுங்கள் என்று ஆதங்கமாக பேசியிருக்கிறார்.