அதுமீது இருக்கும் காதல், பசி குறையவில்லை!! நடிகை மெளனி ராய் ஓபன் டாக்..

Bollywood Indian Actress Actress
By Jai May 26, 2026 06:56 AM GMT
Report

மெளனி ராய்

நடிகை மெளனி ராய் மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான சூரஜ் நம்பியார் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டனர். அதில், இந்த துயரமான சூழலில் நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடனும், அமைதியான முறையில் கையாண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

அதுமீது இருக்கும் காதல், பசி குறையவில்லை!! நடிகை மெளனி ராய் ஓபன் டாக்.. | Mouni Roy Slams Labels After A Tough 9 Year Move

இணையத்தளத்தில் தங்களை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும், இந்த தனிப்பட்ட முடிவிற்கு அனைவரும் மதிப்பளிக்கவும், தனியுரிமையை காக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் கூறியிருந்தனர். இதனையடுத்து சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு கிளாமர் ஆடையணிந்து அசத்தினார்.

நடிப்பு மீதான காதல்

தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேசிய மெளனி ராய், தொலைக்காட்சி துறையில் இருந்து திரைப்படங்களுக்கு மாறுவதற்கு எனக்கு மிக நீண்ட காலம் ஆனது. தோல்விகள், போராட்டங்கள், வெற்றிகள் நிறைந்த ஒரு ரோலர் கோஸ்டர் பயணமாக அது இருந்தாலும், நடிப்பு மீதான தன்னுடைய காதல் ஒருபோதும் குறையவில்லை.

அதுமீது இருக்கும் காதல், பசி குறையவில்லை!! நடிகை மெளனி ராய் ஓபன் டாக்.. | Mouni Roy Slams Labels After A Tough 9 Year Move

நடிப்பு மற்றும் வேலை மீதான பசி, மிக அதிகமாக இருக்கிறது. சோகம், நகைச்சுவை, வில்லத்தனம் கலந்த நெகட்டிவ் ரோல்கள் என அனைத்து வகையான சவாலான வேடங்களிலும் நடிக்க ஆவலோடு இருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போது, ஷூட்டிங் தளத்திற்கு சென்று நடிக்க வேண்டும் என்ற அதே உற்சாகமும் ஈடுபாடும் தனக்குள்ளேயே இருப்பதுதான் கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பரசு என்று கூறியிருக்கிறார்.