என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்தது அந்த பிரபலம் தான்!! அஜித் பட நடிகர் வேதனை
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாலா.
இவர் 2010 -ம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2019 சட்டப்படி விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் அம்ருதா சுரேஷ் இசையமைப்பாளர் கோபி சுந்தர் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் நடிகர் பாலா முதல் மனைவி பிரிந்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் உண்மை. அவரை விவாகரத்து செய்ததும் உண்மை. ஆனால் இதற்கு காரணமாக இருந்தது இசையமைப்பாளர் கோபி சுந்தர் தான்.
சில விஷயங்களை பொது இடத்தில் பகிர்வதில் தனக்கு விருப்பம் இல்லை. உண்மைகளை பேசினால் அது தனது மகளின் எதிர்காலத்தை பாதிக்கும். என்னுடைய மகளை பார்க்க கூட தடுக்கிறார்கள் என்று பாலா கூறியுள்ளார்.