திருப்பாச்சி பெஞ்சமின் இறந்துவிட்டார்னு 4வது முறைபோடுறாங்க? விஜய் பட நடிகர் வேதனை..
திருப்பாச்சி பெஞ்சமின்
தமிழில் வெற்றிக்கொடுக்கட்டு, ஆட்டோகிராஃப், திருப்பாச்சி உள்ளிட்ட பல் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பெஞ்சமின். திருப்பாச்சி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பெஞ்சமின், சில ஆண்டுகளுக்கு இறந்துவிட்டதாக கூறி செய்திகள் பரவியது.
அதுகுறித்து பெஞ்சமினும் விளக்கம் அளித்த நிலையில், தற்போதும் இறந்துவிட்டதாக கூறி செய்தி பரவியதை கேட்டு பெஞ்சமின் பேட்டியில் வேதனையுடன் பேசியுள்ளார்.
4வது முறை போடுறாங்க
அதில், சமூக வலைத்தளத்தில் என்னைப்பற்றி தவறுதலான செய்தியைப் போட்டு என் புகழை களங்கப்படுத்துவதற்காக இப்படி போட்டிருக்காங்க. திருப்பாச்சி பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூகவலைத்தளத்தில் போட்டிருப்பது 4வது முறை. ரொம்ப சங்கடமா இருக்கு, சோசியல் மீடியா செய்திகளை பார்த்திட்டு நான் இறந்து போய்விட்டதாக என் வீட்டில்போய் விசாரிச்சிட்டு இருக்காங்க.
அதுவும்நான் இறந்துட்டதா, என் மனைவியிடம் போய் சேலத்தில் இறங்கி விசாரிச்சிக்கிட்டு இருக்கங்க, நான் இப்போது பரமத்திவேலூரில் கோரைக்காரன் என்ற படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன்.
அவங்களுக்கு வியூஸ் வரணும்னு நடிகர் பெஞ்சமின் செத்துப்போயிட்டார்னு எல்லாம் சோசியல் மீடியால செய்திவிடுறாங்க, ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா. திடீர்னு இப்படி கேட்டுட்டு எங்க வீட்டில் ஹார்ட் அட்டாக் வந்து இழப்பு ஆகிடுச்சுன்னா என்ன ஆகுறது.
ஏற்கனவே என் வீட்ல 4 பேரு ஹார்ட் அட்டாக்ல இறந்துவிட்டாங்க, தயவு செய்த் அந்த மாதிரி போடாதீங்க, 4வது முறை போடுறீங்க தயவு செய்து இது வேண்டாம், இப்படி எல்லாம் பிழைக்கணும் என்கிற அவசியம் உங்களுக்கு இல்லை.
ஆண்டவன் கைக்கால் நல்ல கொடுத்திருக்காரு, கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சு சாப்பிடுங்க என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் திருப்பாச்சி பெஞ்சமின்.