அமிதாப் பச்சன் திருமணத்தின் போது மனைவிக்கு போட்ட கண்டிஷன்..
Actors
Bollywood
Amitabh Bachchan
By Bhavya
அமிதாப் பச்சன்
பாலிவுட் சினிமாவின் ஜாம்பவான் நடிகராக அமிதாப் பச்சன் தனது திரை வாழ்க்கையை 1969ல் துவங்கினார். இன்று வரை சினிமாவில் தொடர்ந்து 55 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
தமிழில் இவர் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். 82 வயதாகும் அமிதாப் பச்சன் தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
கண்டிஷன்
இந்நிலையில், அமிதாப் பச்சன் தனது திருமணத்தின்போது தன் மனைவி ஜெயாவுக்கு போட்ட ஒரு கண்டிஷன் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த தகவலை தனது பேத்தி நவ்யா நந்தாவின் podcastல் அமிதாப் தெரிவித்துள்ளார். அதாவது, தனக்கு மனைவியாக வருபவர் 9 - 5 வேலைக்கு செல்பவராக இருக்க கூடாது என அமிதாப் கண்டிஷன் போட்டாராம்.