ஐஸ்வர்யா இல்ல.. தனுஷ் முதல் காதலி யார் தெரியுமா?
Dhanush
Tamil Cinema
Actors
Tamil Actors
By Dhiviyarajan
இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் தனுஷ். தற்போது அவரது 50 வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார்.
இப்படத்தை அடுத்து பல முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய தனுஷ் முதல் காதல் குறித்து பேசியுள்ளர்.
அதில் அவர், நான் 16 வயது இருக்கும் போது என்னுடன் பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்தேன். மற்ற ஆண்களை போல தான் நானும் அந்த பெண்ணை கவர நினைத்து நிறைய விஷயங்கள் செய்தேன்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார். ஒரு வருடம் கழித்து காதல் வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்னை தூக்கி எறிந்துவிட்டார் என்று தனுஷ் கூறியுள்ளார்.