வடிவேலு எங்க சம்பளத்தை பிடிங்கிப்பாரு..ஆனா விவேக்.. உண்மையை உடைத்த பிரபல நடிகர்..
வடிவேலு
தமிழ் சினிமாவில் காமெடி லெஜெண்ட்-ஆக திகழ்ந்து பல கொடி ரசிகர்கள் தன் பாடி லேங்குவேஜால் ரசிக்க வைத்து வருபவர் வடிவேலு. என்ன தான் வடிவேலுவை பற்றி பலர் புகழ்ந்து பேசினாலும் அவருடன் நடித்த சக நடிகர் நடிகைகள் வடிவேலுவை பற்றி உண்மையான முகத்தை வெளிப்படையாக தற்போது பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.
நடிகர் கொட்டாச்சி
அவருடன் ஒருசில காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமான நடிகர் கொட்டாச்சி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கூட இருக்கவர்கள் கிட்ட கேட்டு பாருங்க, கழுவி கழுவி பேசுவார்கள். கூட இருந்தவர்களுக்கு கொடுத்து நான் கேட்டதில்லை.
அவர் மிகவும் மோசமானவர் என்றும் சக நடிகர்களுக்கு நடிப்பிற்கான சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுத்தாலும் அதை வடிவேலுவே பிடிங்கி கொள்ளுவார்.
இவங்களுக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம் என்றும் கேட்பார். மேலும் விவேக் அப்படிப்பட்டவர் கிடையாது. சக காமெடி நடிகர்களுக்கு அந்நாளுக்கான கூலியை அப்பவே கொடுக்க சொல்வார். விவேக் போல் வடிவேலு ஒரு காலமும் வரமாட்டார் என்று பேசியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.