நடிகை சினேகாவை ஒதுக்கிய திருமணமான நடிகர்.. புன்னகை அரசிக்கே இந்த நிலைமையா
நடிகை சினேகா
புன்னகை அரசி என்று அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. அந்த அளவுக்கு சிரிப்பால் எல்லோரையும் கவர்ந்தவர் அவர். இவர் 2000 -ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இங்கனே ஒரு நிலாபக்ஷி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதே ஆண்டில் தான் மாதவன் நடிப்பில் 'என்னவளே' என்ற படம் வெளியானது. இதில் சினேகா, மணிவண்ணன், வையாபுரி, சார்லி என பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் சினேகா தமிழ் திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இது தான் காரணம்
என்னவளே திரைப்படத்தில் முதலில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கவிருந்தது சிம்ரன் தானாம். ஆனால் அந்த நேரத்தில் அவர் பிஸியாக பல படங்களில் நடித்துவந்ததால் கால்ஷீட் கிடைக்கவில்லை.
இதையடுத்து இப்படத்தின் இயக்குனர் கே சுரேஷின் அடுத்த சாய்ஸாக இருந்தது நடிகை ஜோதிகா. ஆனால் அவரும் அப்போது வேறு படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்தார்.
இந்நிலையில் கே சுரேஷ், சினேகாவை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்தார். இதற்கு மாதவன் 'இந்த படத்திற்கு புதுமுக நடிகை வேண்டாம், முன்னணி நடிகை தான் வேண்டும்' என்று சினேகாவிற்கு நோ சொல்லி விட்டார்.
இருப்பினும் கே சுரேஷ், சினேகா தான் இப்படத்திற்கு பொருத்தமாக இருப்பார் கூறியுள்ளார். இதற்கு கடைசியில் நடிகர் மாதவனும் ஒப்புக்கொண்டாராம்.
நடிகை சினேகா - பிரசன்னா விவாகரத்து குறித்து பெறும் சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. ஆனால், இதற்கு சினேகா பதிலடி கொடுத்து அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுபுள்ளி வைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.