அந்த படத்திற்கு பின் நான் 6 மாதம்.. கீர்த்தி சுரேஷ் இவ்வளவு வெளிப்படையா சொல்லிட்டாரே!
கீர்த்தி சுரேஷ்
முன்னணி நடிகையாக தென்னிந்திய அளவில் வலம் வரும் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.
அடுத்ததாக இவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது. அதே போல் அக்கா என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வெப் சீரிஸ் வெளிவரவுள்ளது.
தற்போது 'ரிவால்வர் ரீட்டா' என்ற புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் 4 நாட்களில் வெளியாக உள்ளது.

நான் 6 மாதம்!
இந்நிலையில், மகாநடி படம் குறித்து கீர்த்தி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், "'மகாநடி' படத்திற்குப் பிறகு சுமார் ஆறு மாதங்களுக்கு எனக்கு எந்தப் பட வாய்ப்பும் வரவில்லை. அந்த நேரத்தில் யாரும் என்னிடம் கதை கூட சொல்லவில்லை.
நான் தவறாக எதுவும் செய்யவில்லை, அதனால் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை.
இயக்குநர்கள் எனக்காக ஒரு சிறந்த கதாபாத்திரத்தை உருவாக்க நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்று நான் நினைத்தேன். அதை நான் நேர்மறையாகப் பயன்படுத்திக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.