சரிகமப சீசன் 5 பைனலுக்கு முன் பவித்ரா செய்த அந்த எமோஷ்னலான செயல்... என்ன?
சரிகமப
ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப. இப்போது சீனியர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இந்த சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியது. மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சுசாந்திகா டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.
2ம் இடத்தை பிடித்து ரன்னர் அப் - சின்னு செந்தமிழன் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கம் ஒன்றை வென்றுள்ளார். கோல்டன் வாய்ஸ் - பவித்ரா (5 லட்சம் மதிப்புள்ள தங்கம் ஒன்றை பெற்றுள்ளார்.
இதில் போட்டியாளர் பவித்ராவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது, காரணம் இறந்த தனது கணவருக்காக இந்த மேடை ஏறியவர்.

எமோஷ்னலான செயல்!
இந்நிலையில், பவித்ரா இறுதி சுற்றுக்கு தேர்வு ஆனதும் தனது ஊருக்குச் சென்று தனது கணவர் கல்லறைக்குச் சென்று அங்கே தனக்கு 6வது இறுதிச் சுற்றுப் போட்டியாளருக்கு அணிவித்த கிரீடத்தைக் கல்லறையில் வைத்து கணவரை வணங்கியுள்ளார்.