கார் வாங்கியதும் உனக்கு ஆக்சிடென்ட் ஆகிடும்ன்னு சைக்கோக்கள் சொல்வாங்க!! மதுரை முத்து டாக்..
மதுரை முத்து
விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமான மதுரை முத்து சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த வீடியோவில், இப்ப எல்லாம் நிறைய சைக்கோவில் இருக்கிறாங்க, அதை நீங்களும் பார்த்து இருக்கீங்க. நானும் பார்த்திக்கிறேன், நம் வாழ்க்கையில் பல சைக்கோக்களை நாம் கடந்து கொண்டு வருகிறோம்.
சமீபத்தில்கூட நேபாளத்தில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் பாடம். முந்தைய நாள் ரூ. 65 கோடிக்கு அதிபதியாக இருந்த நபர் அடுத்தநாளே எதுவும் இல்லாமல் தெருவுக்கு வந்துவிட்டார். உடுக்க உடைக்கூட இல்லாமல் இவர் தவித்ததை வீடியோவக பார்த்திருப்போம், ஆனால் அந்நேரத்திலும் கூட சில கசைக்கோக்களின் செயல் நமக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

அந்த நேபாள வெள்ளத்தில் அடுத்து வரப்பட்ட பெண்களின் உயிரற்ற உடல் சகதியில் முங்கி கிடக்கும்போது கூட அவர்களில் காதுகளில் அணிந்து இருந்த நகையை திருடுவதற்காக சில முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வீடியோகளையும் நாம் பார்த்தோம்.
நிலையில்லாத வாழ்க்கை எவ்வளவு பெரிய கோடீஸ்வரனையும் பிச்சைக்காரனாக மாற்றிவிடும் என்று தெரிந்தப்பின் அந்த சூழ்நிலையிலும், என் வாழ்க்கை நல்ல இருக்க வேண்டும் என்று மனிதாபிமானமே இல்லாமல் திருடுகிறவங்களின் மூளையை நாம் என்ன சொல்றதுன்னு தெரியல, அவங்கள இரு சைக்கோக்கள் என்றே சொல்லலாம், அதேபோல் சில சைக்கோக்கள் சோசியல் மீடியாவில் பார்த்திருப்போம். யார் என்ன போஸ்ட் போட்டாலும் அதற்கு நெகட்டிவாகவே கமெண்ட் போடுவார்கள்.

கார் வாங்கியதும்
சமீபத்தில்கூட நான் கார் வாங்கியிருக்கிறேன் என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தேன், அதற்கு கீழே ஒருவன் கமெண்ட் போட்டிருக்கிறான், நீ விரைவில் ஆக்சிடென்ட்டாவதற்கு வாழ்த்துகள் என்று சொல்லியிருக்கிறார்.
இப்படிப்பட்ட மனநிலை எல்லாம் என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை, ஏற்கனவே எனக்கு பல ஆக்சிடென்ட் நடந்திருக்கிறது, ஆனாலும் இன்று நான் வந்திருக்கிறேன். இப்படி இருக்கும்போதும் கூட அடுத்தவங்க நல்லா இருக்கக்கூடாது என்று நினைக்கிற மனநிலையை என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதுபோல் இன்னும் சில சைக்கோக்கள் இருக்கிறார்கள்.