நடிகர் மம்மூட்டி இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா! அடேங்கப்பா
மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் மம்மூட்டி. 54 ஆண்டுகளை சினிமாவில் கடந்த பிறகும் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கி அதில் ராஜாவாக அமர்ந்து இருக்கிறார்.
ஒரு பக்கம் ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படங்கள், மற்றொரு பக்கம் எக்ஸ்பிரிமெண்ட் திரைப்படங்கள் என தொடர்ந்து நம்மை என்டர்டைமன்ட் செய்து வருகிறார். இவருடைய மகன் துல்கர் சல்மானும் தற்போது மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மம்மூட்டியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 340 கோடி ஆகும். இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 5 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
மேலும் இவருடைய வருட வருமானம் மட்டுமே ரூ. 50 கோடி என தகவல் தெரிவிக்கின்றனர். இவர் G-Class Mercedes, Range Rover Sport, Audi A7, Jaguar XJ உள்ளிட்ட பல கோடி கணக்கில் மதிப்பிலான சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார். கேரளாவில் ரூ. 4 கோடி மதிப்பில் இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.