இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா மரணம்!! இது தான் காரணமா?
80-களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் மனோபாலா. ஆகாய கங்கை படத்தில் ஆரம்பித்து 2002ல் வெளியான நைனா படம் வரை 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி பிரபலமானார்.
300க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து சில படங்களை தயாரித்தும் வந்துள்ளார் மனோபாலா. ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
தன்னுடைய பாடி லேங்குவேஜ் மூலம் அனைவரையும் ஈர்த்து வந்த மனோபாலா இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல ஸ்வாரஷ்யமான விசயங்களை பகிர்ந்தும் யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களுடன் கலந்துரையாடியும் வந்துள்ளார்.
தமிழ் சினிமாத்துறையில் முக்கிய பங்காற்றி வந்த மனோபாலா இன்று மதியம் 1 மணிக்கு மேல் மரணமடைந்துள்ளார்.
மனோபாலா அவர்கள்உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீபத்தில் கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மனோபாலா.