ரெண்டே படம் தான்!! 2 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியான நடிகர்...
கிரிஷ் குமார்
பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராமையா வஸ்தாவையா என்ற படத்தில் நடித்தவர் தான் நடிகர் கிரிஷ் குமார். இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சுமார் 38 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் 50 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
இப்படத்திற்கு பின் கிரிஷ்குமார் லவ் சூதா என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் தோல்வியை சந்தித்ததால் நடிப்பதை கிரிஷ் குமார் விட்டுவிட்டு ஃபேமிலி பிசினஸில் இறங்கினார்.
சொத்து மதிப்பு
கிரிஷ் குமார், பிரபல தயாரிப்பாளர் குமார் தாராணியின் மகன். டிப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை கிரிஷ் குடும்பம் நடத்தி வருகிறார்கள். 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த டிப்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக கிரிஷ் குமார் பணியாற்றி வருகிறார்.
தற்போது கிரிஷ் குமாரின் சொத்து மதிப்பு உயர்ந்ததாக கூறப்படுகிறது. டிப்ஸ் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ. 8, 500 கோடி வரை இருக்குமாம்.
அந்தவகையில் கிரிஷ் குமாரின் சொத்து மதிப்பு ரூ. 2164 கோடி என்று மதிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. கிரிஷ் குமார் இளம் வயது தோழியை திருமணம் செய்து குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வருகிறார்.