என்னது ரூ. 500 கோடி வரதட்சணையா.. எனக்கே தெரியாதே, பிரபு அதிரடி
Prabhu
By Yathrika
நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அண்மையில் சென்னையில் மிகவும் சிம்பிளாக திருமணம் நடந்தது. காரணம் ஐஸ்வர்யாவுக்கு மறுமணம் என்பதால் மிகவும் சிம்பிளாக நடந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது திருமணத்தில் மிகவும் ஹைலைட்டான விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால் ஐஸ்வர்யாவுக்கு நடிகர் பிரபு ரூ. 500 கோடி வரதட்சணை கொடுத்துள்ளார் என்பது தான்.
இந்த விஷயத்தை பிரபல பத்திரிக்கையாளர் நடிகர் பிரபு காதில் போட அவரோ, ஏற்கனவே எங்கள் குடும்பத்தில் சொத்து பிரச்சனை இருக்கிறது, இதுல இது வேறயா.
நான் 500 கோடியை, பத்திர பதிவு செய்து கொடுத்தது போல் பேசுகிறார்கள் எல்லோரும், ஆனால் அப்படியெல்லாம் எதுவும் கொடுக்கப்படவில்லை என அவரது ஸ்டைலில் கூறியுள்ளார்.