சம்பளத்தை அதிகரித்த பிரதீப் ரங்கநாதன்.. எவ்வளவு தெரியுமா?
Pradeep Ranganathan
By Kathick
லவ் டுடே, டிராகன் மற்றும் dude என தொடர்ந்து ரூ. 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன்.
இவர் நடிப்பில், அடுத்ததாக LiK திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சந்திரசேகர் எலெட்டி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரதீப் ரங்கநாதன் ரூ. 50 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.