விஜய்யிடம் நாட்டின் தலைவிதியை ஒப்படைப்பதா?.. பிரகாஷ் ராஜ் பேச்சால் பரபரப்பு
விஜய்
நடிகர் விஜய் தற்போது அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். தற்போது நடிப்பை தாண்டி அரசியலில் பிஸியாக வலம் வருகிறார்.
தலைவிதியை ஒப்படைப்பதா?
இந்நிலையில், பேட்டி ஒன்றில் விஜய் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " விஜய் அரசியலுக்கு புதியவர், அவரை நான் அறிந்தவரையில் நாங்கள் அரசியலை பற்றி தீவிரமாக பேசியதில்லை. அவருக்கு இருக்கும் பிரபலத்தின் காரணமாக அவர் அரசியலுக்கு வந்து இருக்கிறார்.
பவன் கல்யாணும் அப்படிதான். விஜய்கோ, பவன் கல்யாணுக்கோ நாட்டில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து தெளிவான பார்வை இல்லை, புரிதலும் இல்லை.
விஜய்யோ அல்லது பவன் கல்யாணோ தேர்தலில் ஒரு சில இடங்களை பெறலாம். ஆனால், அதற்கு பிறகு தங்களை நிரூபிக்க வேண்டும்.
விஜய் பேசும்போது வசனங்களை கேட்பதுபோல் தான் இருக்கிறது. அவருக்கு ஆழமான புரிதலே இல்லை. இவரை நம்பியா இந்த நாட்டின் தலைவிதியை ஒப்படைப்பது" என கூறியுள்ளார்.