கல்யாணத்துக்கு நான் ஓகே, ரெடி தான்!! முதன்முதல் ஓப்பனாக பேசிய நடிகர் பிரசாந்த்...
90ஸ் கிட்ஸ்களின் சாக்லெட் பாயாக திகழ்ந்த நடிகர்களில் ஒருவர் நடிகை பிரசாந்த், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். Vinaya Vidheya Rama என்ற படத்தில் ராம் சரணின் அண்ணாக நடித்தப்பின் அந்தகன் என்ற படத்தில் நடிகரும் பிரசாந்தின் அப்பாவுமான தியாகராஜன் இயக்கத்தில் நடித்தார். கிட்டத்தட்ட படம் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.
சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தின் நடித்துள்ளனர். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் நடிகர் பிரஷாந்த் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய திருமணம் குறித்த கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்திருக்கிறார். கமிட்டட், சிங்கிள் என்ற மீம்ஸ் புகைப்படத்தை காட்டியதும், மேரேஜ் என்பது ஒரு நாள் நடக்கும், நான் ஓகே சொல்லிவிட்டேன், ரெடி தான் என்று கூறியிருக்கிறார் நடிகர் பிரஷாந்த்.
என்னென்ன தகுதி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, ஒரு பொண்ணாக இருக்கனும், புரிந்து கொள்ளும் தன்மை ஆட்டோமெடிக்கா வந்துரும் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.