பணத்திற்காக திருமணம் செய்துகொண்டாரா அசோக் செல்வன்.. உண்மையை உடைத்த பிரபலம்!!
பிரபல நடிகரான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், கடந்த ஆண்டு நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் இந்த தம்பதி சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் சுபைர், நடிகர் அசோக் செல்வன் பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர் பேசுகையில், அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றிய போது இருவரும் நண்பர்களாக பழகி காதலிக்க ஆரம்பித்தார்கள்.
இவர்களின் திருமணத்திற்கு நிறைய வாழ்த்துக்களும் வந்தது. அதை விட விமர்சனங்களும் எழுந்தது.
அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு காதலித்து திருமணம் செய்தார்கள். ஆனால், அசோக் செல்வன் பணத்திற்காக திருமணம் செய்துகொண்டார் என்று வரும் தகவல்கள் பொய்யானவை என பத்திரிகையாளர் சுபைர் கூறியுள்ளார்.