நடிகர் ரோபோ சங்கர் மீதுள்ள விசுவாசம்.. பணமாலை சூடி நெகிழவைத்த நடிகர்!
ரோபோ ஷங்கர்
காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் அனைவரையும் சிரிக்க வைத்தவர் தற்போது துக்கத்தில் ஆழ்த்திவிட்டார். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ ஷங்கர் சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் மயக்கம் அடைந்திருக்கிறார்.
உடனே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் செப்டம்பர் 18 உயிரிழந்தார்.
அவரின் இறுதி முகத்தை காண பல நடிகர்கள் வந்த நிலையில், நடிகர் ஒருவர் பணமாலையுடன் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நெகிழவைத்த நடிகர்!
அவர் தான் நடிகர் ராமு, ரூ. 500 தாள்களுடன் அந்த பணமாலை செய்யப்பட்டு இருந்தது. பின் அவர் பேசுகையில்," நான் ஆரம்பத்தில் கூலி வேலைக்கு சென்றுகொண்டிருந்தேன்.
அப்போது ரோபோ சங்கர் அண்ணன் தான் 2000ம் ஆண்டு எனக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கார்டு எடுத்துக் கொடுத்தார்.
அப்போதிலிருந்தே அண்ணனுக்கு எனக்கும் நல்ல பழக்கம். பிரியங்கா அக்கா என்னை அவர்களின் குடும்பத்தில் ஒருத்தனாக தான் பார்த்தார்" என்று தெரிவித்துள்ளார்.