மனோபாலாவை தொடர்ந்து ரஜினிகாந்த் பட நடிகரும் மரணமா? குடும்பத்தினர் வெளியிட்ட விளக்கம்

Sarath Babu Manobala
By Edward May 03, 2023 04:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நட்சத்திரங்களின் மரணம் அதிர்ச்சியை கொடுத்து வந்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் மயில்சாமி மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது.

இன்று மதியம் யாரு எதிர்ப்பார்க்காத நிலையில் காமெடி நடிகரும் இயக்குனருமான மனோபாலா கல்லீரல் பிரச்சனையால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவரது வீட்டில் மரணமடைந்தார்.

மனோபாலாவை தொடர்ந்து ரஜினிகாந்த் பட நடிகரும் மரணமா? குடும்பத்தினர் வெளியிட்ட விளக்கம் | Actor Sarathbabu Death News False Family Reply

இதற்கு சினிமா நட்சத்திரங்கள் அரசியல்வாதிகள் ரசிகர்கள் நேரில் சென்றும் இணையத்தில் இரங்கல் தெரிவித்தும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த துக்கம் துயரம் அடங்காத சமயத்தில் தற்போது, அண்ணமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் சரத் பாபு அவர்கள் மரணமடைந்த செய்தி வெளியாகியுள்ளது. 71 வயதான சரத் பாபு உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் காலமானார்.