டான்ஸ் ஜோடி டான்ஸ் - சரிகமப மகா சங்கமம்.. மேடையில் சரத்குமார் எமோஷ்னல், என்ன ஆனது?

Sarathkumar Dance Jodi Dance Saregamapa Lil Champs
By Bhavya Apr 21, 2025 01:30 PM GMT
Report

சரத்குமார்

நடிகர் சரத்குமார், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர். கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பின் சூரியன், வைதேகி கல்யாணம், சேரன் பாண்டியன், சூர்யவம்சம், சமுத்திரம் என தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வந்தார்.

விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் நடிப்பது, பிட்டாக இருப்பதற்கு உடற்பயிற்சி செய்வது என ஆக்டீவாக இருக்கிறார் சரத்குமார்.

இவருடைய மகள் வரலட்சுமி பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக உலா வருகிறார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் - சரிகமப மகா சங்கமம்.. மேடையில் சரத்குமார் எமோஷ்னல், என்ன ஆனது? | Actor Sarathkumar Emotional On Stage

சரத்குமார் எமோஷ்னல் 

இந்நிலையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் சரிகமப நிகழ்ச்சியின் மகா சங்கமம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் முதலில் ஆடி பாடி கொண்டிருந்த சரத்குமார் தன் அக்கா அவர் குறித்து பேசிய விஷயத்தை கேட்டு சற்று எமோஷ்னல் ஆகிவிட்டார்.

அதில், "என் வாழ்க்கையில் நான் உடைந்து நின்ற இடத்தில் எல்லாம் நீதான் முன் வந்து எனக்கு பலமாக நின்றாய்" என்று கூற சரத்குமார் அவரது அக்காவை கட்டிப்பிடித்துக் கொண்டார். தற்போது, இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

டான்ஸ் ஜோடி டான்ஸ் - சரிகமப மகா சங்கமம்.. மேடையில் சரத்குமார் எமோஷ்னல், என்ன ஆனது? | Actor Sarathkumar Emotional On Stage