பாக்கியலட்சுமி சீரியலுக்கு வரும் முக்கிய ஹீரோ.. போட்டோவுடன் இதோ
Baakiyalakshmi
By Parthiban.A
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக இந்த தொடரின் கதையில் எதிர்பார்த்த அளவுக்கு பரபரப்பான காட்சிகள் எதுவும் இல்லை என விமர்சனம் இருந்து வருகிறது.
அதனால் டிஆர்பி ரேட்டிங்கும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் பாக்கியலட்சுமியை பின்னுக்கு தள்ளி விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக மாறி இருக்கிறது.
சித்தார்த்..
இந்நிலையில் பாக்கியலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நடிகர் சித்தார்த் வந்திருக்கிறார். அதன் புகைப்படங்களை தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது.
சித்தார்த் தற்போது நடித்து இருக்கும் 'சித்தா' படத்தின் ப்ரோமோஷனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
