பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரரா நடிகர் சிவகார்த்திகேயன்.. அவரே சொன்ன தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், அடுத்ததாக எஸ்கே 23 மற்றும் எஸ்கே 24 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும். ஆனால், தங்களுடைய சொத்து மதிப்பு ஒரு நட்சத்திரமும் வெளிப்படையாக கூறமாட்டார்கள்.
ஆனால், நடிகர் சிவகார்த்திகேயனே தனது சொத்து மதிப்பு குறித்து Interview ஒன்றில் நகைச்சுவையாக பேசியுள்ளார். கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட அந்த Interview-வில் 'உங்களுடைய சொத்து மதிப்பு எவ்வளவு' என தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் கூறிய சிவகார்த்திகேயன், '45,000 கோடி இருக்கும் என சொல்லிக்கொள்ள வேண்டியது தான். நாம என்ன அம்பானியா இல்ல அதனியா சொத்து மதிப்பு எல்லாம் சொல்றதுக்கு' என நகைச்சுவையாக பதிலளித்தார்.