சம்மருக்கு வயசு மூத்த நடிகையுடன் ஜாலியாக தீவுக்கு பறந்த வாரிசு நடிகர்..
வாரிசு நடிகர்
சினிமா பிரபலங்களின் வாரிசுகளுக்கு முதல் படம் மட்டுமின்றி எத்தனை படங்கள் தோல்வியானாலும் சரி, அடுத்தடுத்து அவர்களை தூக்கி நிறுத்த சினிமாதுறை காத்திருக்கும். ஆரம்பத்தில் இருந்தே கிடைத்த வாய்ப்பை வீணாக்கி வந்த நடிகருக்கு கடைசி வாய்ப்பாக வாரிசுகளை வளர்த்துவிட டைரக்டர் சிக்க அவரும் தரமான படத்தை வழங்கினார்.

அதுமட்டுமில்லாமல் வாரிசுக்கு ஏத்த ஜோடி ஒன்றையும் செட் பண்ணிவிட்டதுதான் தற்போது சிக்கல். வாரிசு நடிகரைவிட அந்த நடிகை கொஞ்சம் வயதானவர் என்று சொல்லப்பட்டாலும் ஜோடியாக நடித்தபோதே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கெமிஸ்ட்ரி, பயோலஜி எல்லாம் பக்காவாக பற்றிக் கொண்டது என்று கூறுகின்றது.

தீவு
ஷூட்டிங்கிலேயே தாமதம் ஏற்பட காரணமே இருவரும் சில வாரங்கள் ஷூட்டுக்கு லீவு போட்டு எஸ்கேப் ஆனது தானாம். சம்மர் வெயிலை சமாளிக்க முடியாமலிருந்த நடிகை ஜாலியாக தீவு ஒன்றுக்கு அவுட்டிங் செல்ல, நீயும் வரியா என நடிகரை கேட்டு டிக்கெட் போட்டு பறந்துவிட்டார்களாம்.
நடிகையுடன் டேட் சென்று வந்த வாரிசு நடிகர் இப்போது திருமணத்திற்கு முன் ஹனிமூனுக்கு சென்றுவிட்டாரே என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளது.