உயிரை பணயம் வைத்து நடித்த சூரி.. வெறும் லட்சத்தில் சம்பளம் கொடுத்து ஒதுக்கிய தயாரிப்பாளர்

Vetrimaaran Soori
By Dhiviyarajan Mar 11, 2023 01:00 PM GMT
Report

பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபல காமெடி நடிகராக உயர்ந்தவர் தான் சூரி. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள "விடுதலை" படத்தின் மூலம் ஹீரோவாகவும் களமிறங்கவுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் விடுதலை படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் சில காட்சிகளில் சூரி உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். இதனால் பலரும் அவரை பாராட்டினார்கள்.

விடுதலை இரண்டு பாகங்களாக தயார் ஆகியுள்ளது. முதல் பாகம் வரும் மார்ச் 31 தேதி வெளியாகவுள்ளது.

உயிரை பணயம் வைத்து நடித்த சூரி.. வெறும் லட்சத்தில் சம்பளம் கொடுத்து ஒதுக்கிய தயாரிப்பாளர் | Actor Soori Salary Details For Viduthalai

சம்பள விவரம்

இந்நிலையில் விடுதலை படத்திற்காக சூரி வாங்கிய சம்பளம் விவரம் வெளியாகியுள்ளது. அதில் விடுதலை படம் தொடங்கும் முன்பு சூரிக்கு சம்பளமாக 30 லட்சம் தான் பேசப்பட்டது.

ஹீரோவாக முதல் படம் என்பதால் சூரியும் எதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் கடைசியில் விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவானது. இருப்பினும் தயாரிப்பாளர் சூரிக்கு வெறும் 10 லட்சத்தை மட்டும் கூட்டி கொடுத்தாராம்.

காமெடியனாக 1 கோடி அளவிற்கு சம்பளமாக வாங்கி வந்த சூரி, இப்படத்திற்காக 40 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளது, பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் கதாநாயகனாக ஒருசில படங்களில் நடிகர் சூரி கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உயிரை பணயம் வைத்து நடித்த சூரி.. வெறும் லட்சத்தில் சம்பளம் கொடுத்து ஒதுக்கிய தயாரிப்பாளர் | Actor Soori Salary Details For Viduthalai