நீ நடிக்க போறியா, என்ன பாத்து சிரிச்சாங்க! சூர்யா நடிக்க வந்த காரணமே வேற..

Sivakumar Suriya Soorarai Pottru
By Edward Jul 23, 2022 07:06 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. பல வெற்றிப்படங்களை கொடுத்த சூர்யா ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்து பின் நல்ல ஒரு இடத்தினை பிடித்தார். சமீபத்தில், ஜெய்பீம், சூரரை போற்று போன்ற மகத்தான வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

நடிப்பை தாண்டி பல சமுக அக்கரை கொண்ட படங்களை தயாரித்தும் வருகிறார். அப்படி தயாரித்து நடித்த படம் தான் சூரரைப்போற்று. நேற்று இப்படத்திற்காக தேசிய திரைப்பட விருது 5 கிடைத்துள்ளது.

சிறந்த பின்னணி இசைக்கு ஜிவி பிரகாஷ் ராஜ், சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி , சிறந்த திரைக்கதை ஆசிரியருக்காக ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கராவும், சிறந்த படம் சூரரை போற்று என்று கிடைத்துள்ளது. இன்று நடிகர் சூர்யா அவரது 47 வது பிறந்த நாளை கடந்துள்ளார்.

நீ நடிக்க போறியா, என்ன பாத்து சிரிச்சாங்க! சூர்யா நடிக்க வந்த காரணமே வேற.. | Actor Suriya Open Up Cinema Struggles

அவருக்கு ட்ரீட்டாக இந்த விருது அமைந்துள்ளது. இந்நிலையில் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் காசுக்காக நடிக்க போறேன் என்று கூறியது என் நண்பர்கள் என்னை பார்த்து சிரிச்சாங்க, நீ நடிக்க போறியா என்றார்கள். அப்படி நடிக்க ஆரம்பித்த படம் தான் நாளைய தீர்ப்பு. அப்படத்திற்காக 50 ஆயிரம் சம்பளம் வாங்கினேன்.

அப்போது எங்களுக்கு 25 ஆயிரம் கடன் இருந்துச்சு அதற்கு தான் நடிக்க ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார். அப்படி ஒரு கஷ்டத்திற்கு பெரிய வெற்றியை தேசிய விருது மூலம் நிரூபித்துள்ளீர்கள் என்று ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.