கள்ளச்சாராய விவகாரம்!! விஜய்யை தொடர்ந்து அரசை அதிரவைத்த நடிகர் சூர்யா..

Suriya Vijay Tamil nadu Kallakurichi
By Jai Jun 21, 2024 09:41 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா, சமுக கருத்துக்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்தும் மேடைகளில் பேசியும் வருவார். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கள்ளச்சாராய விவகாரம்!! விஜய்யை தொடர்ந்து அரசை அதிரவைத்த நடிகர் சூர்யா.. | Actor Suriya Statement For Kallakuruchi Deaths

அதில் தற்போது வரை 45க்கும் மேற்பட்ட மரணமடைந்து மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மரணமடைந்த குடும்பங்களுக்கு அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் ஆறுதல் கூறியும், கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் கூறி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நடந்து 3வது நாளாகியும் நடிகர் சூர்யா எந்தவொரு கருத்தையும் கூறவில்லை என்று நெட்டிசன்கள் மற்றும் விமர்சகர்கள் விமர்சித்து வந்தனர். தற்போது சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இனி ஒரு விது செய்வோம்! அதை எந்நாளும் காப்போம்! என்ற பதிவோடு கூடிய ஒரு அறிக்கையை வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தையும் ஆறுதலையும் கூறியுள்ளார்.

GalleryGallery