வாக்களிக்க வித்தியாசமாக சைக்கிள் வந்த நடிகர் விஜய்! இணையத்தில் லீக்கான வீடியோ... மகிழ்ச்சியில் ரசிகர்கள்

vijay master thalapathi65 vijay65
By Jon Apr 07, 2021 04:08 AM GMT
Report

நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெறிவிக்கவே நடிகர் விஜய் சைக்கிளில் பயணித்து வந்து வாக்களித்தாக கூறப்படுகிறது.

அவரது புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள் பலரும் வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்ட சில நிமிடங்களில் முதல் ஆளாக வாக்களித்துச் சென்ற நிலையில், நடிகர் விஜய் சற்று வித்தியாசமாக தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வாக்களிக்க சென்றுள்ளார்.

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.