நடிகர் விஜய்யின் 51வது பிறந்தநாள்! அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
விஜய் தற்போது இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார்.
இப்படத்தை முடித்த கையோடு முழுமையாக அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். அரசியலுக்கு விஜய் சென்ற மகிழ்ச்சியாக இருந்தாலும், சினிமாவை விட்டு அவர் விலகியது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்துள்ளது. இன்று விஜய்யின் பிறந்தநாள் என்பதால் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த கிலிம்ப்ஸ் வீடியோ தற்போது Youtube-ல் டிரெண்ட் ஆகிவருகிறது.
இந்த நிலையில், 51வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 474 கோடி என தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 200 கோடி முதல் ரூ. 275 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.