யாருக்கும் தெரியாத நடிகர் நடிகைகளின் உண்மை முகம்.. கணவருக்காக நடிகை தொழிலை மாற்றிய நடிகை!!
சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்கள் நடிப்பை தாண்டி பல விசயங்களிலும் தொழில்களிலும் ஈடுபடுவார்கள். அப்படி பல நடிகைகள் தங்களின் கணவர்களுக்காகவோ குடும்பத்தில் ஏற்பட்ட சூழல் மற்றும் தன்னுடைய திறமையை காட்ட பன்முகத்திறமையை காட்டி வருவார்கள்.
அப்படி நடிகர் நிழல்கள் ரவி ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து அதன்பின் இடையில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்து வந்தார். பாலிவுட் நடிகர்களின் குரலுக்கு தமிழில் டப் செய்தும் வருகிறார்.
நடிகை சின்மயி பாடகியாக இருந்து பின் பின்னணி குரலை முன்னணி நடிகைகளுக்கு கொடுத்து வந்தார். சமீபத்தில் கூட நடிகை சமந்தாவின் குரல் இனிமேல் என்னோடது இல்லை என்று கூறியிருந்தார்.
90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை கனிகா தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இடையில் ஜெனிலியா, சதா, ஷ்ரேயா சரண் உள்ளிட்ட நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து வருகிறார்.
தற்போது தமிழ், தெலுங்கு மொழிக்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வரும் நடிகை ராதிகா முதல் மரியாதை படத்தில் நடிகை ராதாவுக்கும், நடிகை நிரோஷாவுக்கும் பல படங்களில் குரல் கொடுத்துள்ளார்.
நடிகையாக அறிமுகமாகி இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்தப்பின் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை சுஹாசினி மணிரத்னம். மின்சார கனவு, இருவர், உயிரே, திருடா திருடா போன்ற படங்களின் கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்தும் நடிகை ஷோபனாவுக்கு தளபதி படத்தில் குரல் கொடுத்தும் தன் கணவர் படங்களில் இப்படியொரு வேலையை செய்திருக்கிறார் சுஹாசினி.