சீரியல் நடிகையின் 14 வயது மகன் மர்ம மரணம்!! கதறும் நடிகை சப்னா..

Crime SL Actress Gossips Actress
By Edward Dec 12, 2024 12:30 PM GMT
Report

சப்னா சிங் கங்வார்

பாபிஜி கர் ஹை, கிரைம் பேட்ரோல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சப்னா சிங் கங்வார். இவரது மகன் சாகர் கங்வார், தாய் மாமன் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை சாகர், வீட்டில் இருந்த போது அனுஜ் சிங் மற்றும் சவுத்ரி ஆகியோர் விட்டுக்கு வந்து கிரிக்கெட் விளையாட அழைத்துச் சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் சாகர் வீட்டிற்கு வராததால் அவரது மாமா அவரை பல இடங்களில் தேடியும் செல்போனில் அழைத்தபோது போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது.

இதனையடுத்து இரு நாட்களுக்கு பின் இசத்நகர் பகுதியில் உள்ள கிராமத்தில் சாகரின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சீரியல் நடிகையின் 14 வயது மகன் மர்ம மரணம்!! கதறும் நடிகை சப்னா.. | Actress 14 Year Old Son Found Dead Drug Overdose

என்ன காரணம்

இதுகுறித்து போலிசார் விசாரித்ததில் இறப்பிற்கான காரணத்தை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை, அவரது உடலில் நச்சுத்தன்மைக்கான தடயங்கள் எதுவும் இல்லை என்றும் அதிகப்படியான மது அருந்தி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், உடலில் காயங்களைத் தவிர வேறு எந்த அடையாளங்களும் இல்லை என்றும் கூறியுள்ளனர். சம்மந்தப்பட்ட அனுஜ் மற்றும் சன்னியின் மீது ஆதாரங்கள் அடிப்படையில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளர்.

14 வயதான தன் மகன் மர்ம மரணம் குறித்து பேசிய நடிகை சப்னா, என் மகன் இப்போது இல்லை, அவனை சுட்டு, அவரது கை மற்றும் கால்களை உடைத்து, வெட்டி கொலை செய்துள்ளனர்.

என் குழந்தையை இவ்வளவு கொலை செய்ய என்ன காரணம் அவன் யாருக்கு என்ன தீங்கு செய்தான். என் மகனை கொலை செய்தவர்கலை போலீஸ் என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று கண்ணீருடன் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.