விஜய்யால் இதை எப்படி செய்ய முடிஞ்சது..ஷாக்காகிய பிரபல நடிகை...
விஜய் TVK
நடிகர் விஜய், சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் தன்னுடைய அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய விஜய்யின் பேச்சை பலரும் விமரித்து வந்த நிலையில், நடிகையும் ஆந்திர முன்னாள் அமைச்சருமான ரோஜா, விஜய்யின் ஈரோடு மீட்டிங் பற்றி பகிர்ந்துள்ளார்.

ரோஜா
அதில், விஜய்யின் ஈரோடு மீட்டிங்கை பார்க்கும்போது உண்மையாகவே எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நாங்கள் அரசு சார்ப்பாக, முதலைமைச்சருக்கு ஒரு மாநாட்டில் மீட்டிங் நடத்த வேண்டும் என்றால், அதற்கு பலர் விடியவிடிய வேலை செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
அந்த மீட்டிங் நடத்த, அமைச்சர்கள், எம் எல் ஏ, எம் பி, எஸ் பி, கலெக்டர் என்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்த மீட்டிங் நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால், அனைவரும் ஒத்துழைத்தால் தான் பெரிய மீட்டிங் நடத்த முடியும்.

ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆட்கள் இல்லை, பெரிய ஆள் கிடையாது. இவ்வளவு பெரிய மீட்டிங்கை விஜய் எப்படி செய்தார் என்று சத்தியமாக எனக்கு புரியவே இல்லை. மக்கள் விஜய்யிடம் ஒரு விஷயத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். விஜய் சார் அதை தெரிந்து கொண்டு மக்களுக்கு, அதை கொடுக்கும்போது தான் மக்கள் ஆதரவு விஜய்க்கு கண்டிப்பாக இருக்கும் என்று நடிகை ரோஜா பேசியிருக்கிறார்.