வீட்டுக்கு தெரியாமல் அந்த விசயத்தை ஆர்யாவுடன் அதை செய்தேன்!! ஆர்யா முன்னாள் காதலி அபர்ணதி..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை காதலித்து கடந்த 2019ல் திருமணம் செய்து ஒரு மகளையும் பெற்றார். திருமணத்திற்கு முன் பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் பெண் பார்த்தார்.
அதற்காக 16 இளம் பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்ய போட்டிபோட்டனர். ஆனால் அவர்கள் யாரையும் திருமணம் செய்யாமல் இறுதி சுற்று வரை வந்த மூன்று பெண்கள் உட்பட பல பெண்களை நம்ப வைத்து ஏமாற்றினார். அப்படி நம்பி ஏமாற்றம் அடைந்தவர் தான் அபர்ணதி.
அந்நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார். அதன்பின் இன்று வரை அபர்ணதி ஆர்யாவை மறக்கமுடியாமல் 6Ya என்ற எழுத்தை மாற்றாமல் இருந்து வருகிறார். இதன்பின் ஜெயில், தேன் உள்ளிட்ட சில படங்களில் அடக்கவுடக்கமாக நடித்து வந்தார்.
தற்போது கிளாமர் ரூட்டுக்கு அவரும் மாறி கவர்ச்சி போட்டோஷூட்டினை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இறுக்கப்பற்று படத்தில் நடித்திருந்தார். உடல் எடையை அப்படத்திற்காக ஏற்றி தற்போது மீண்டும் உடலை குறைத்திருக்கிறார்.
கடைசியாக அளித்த பேட்டியொன்றில் ஆர்யாவுடன் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வீட்டிற்கு பொய் சொல்லிவிட்டு ஆடிஷன் சென்றேன். அந்த நிகழ்ச்சி எல்லாம் நமக்கு செட்டாகாது என்று கூறுவார்கள்.
ஆனால் எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று பொய் சொல்லிவிட்டு போனதாகவும் நிகழ்ச்சி பிரமோ வீடியோவை பார்த்து வெளிநாட்டில் இருக்கும் அப்பாக்கு தெரிஞ்சது. இதனால் வீட்டில் பெரிய பிரச்சனை வந்ததாகவும் அபர்ணதி தெரிவித்திருக்கிறார்.



