என் உடம்பு அப்படி இருக்குனு சொல்லிட்டு என்ன.. வெளிப்படையாக பேசிய அபிராமி
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அபிராமி, கடந்த 2000 -ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் என்ற படத்தின் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் அபிராமி.
இப்படத்தை தொடர்ந்து விருமாண்டி, மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் ஆகிய பல படங்களில் நடித்தார்.
நம்பி வீட்டிற்குள் அழைத்தால் இப்படியா பண்ணுவது..சிவகார்த்திகேயனுக்கு எதிரா என்கிட்ட ஆடியோ ஆதாரம் இருக்கு
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அபிராமி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், என்னுடன் சேர்ந்து நடித்த பலரும் என்னை விட உயரமானவர்கள்.
பிற மொழி படங்களில் நடிக்கும் போது உயரமானவர்களுடனும், உயரம் இல்லாதவர்களுடனும் சேர்ந்து நடித்து இருக்கிறேன். எனக்கு என்னுடைய உயரம் எப்போதும் பிரச்சினையாக இருந்ததில்லை.
ஆனால் அந்தப் பொண்ணு ரொம்ப உயரமாக இருக்காங்க என்று சொல்லி ஒதுக்கிய சந்தர்ப்பங்கள் சில இருக்கிறது என்று நடிகை அபிராமி கூறியுள்ளார்.