நம்பி வீட்டிற்குள் அழைத்தால் இப்படியா பண்ணுவது..சிவகார்த்திகேயனுக்கு எதிரா என்கிட்ட ஆடியோ ஆதாரம் இருக்கு

Sivakarthikeyan D Imman Actors Tamil Actors
By Dhiviyarajan Oct 21, 2023 01:00 PM GMT
Report

சமீபகாலமாக இமான் - சிவகார்த்திகேயன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இமான், இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு செய்தது மிக பெரிய துரோகம். என்னுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நான் அதை குறித்து பேசாம இருக்கிறேன் என்று இமான் பேசி இருந்தார்.

இமான் முதல் மனைவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே தொடர்பு இருந்தது என்று ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

நம்பி வீட்டிற்குள் அழைத்தால் இப்படியா பண்ணுவது..சிவகார்த்திகேயனுக்கு எதிரா என்கிட்ட ஆடியோ ஆதாரம் இருக்கு | Imman And Sivakarthikeyan Controversy

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய வலைப்பேச்சு அந்தணன், ஒருவரை நம்பி வீட்டிற்குள் அழைத்தால் அதற்கான மரியாதையை அவர் காப்பாற்றி இருக்க வேண்டும். இமானின் முதல் மனைவி பேசும் போது, சிவகார்த்திகேயன் நல்லவர், வல்லவர் என்று சொன்னார். இதை பார்க்கும் போது இவர்களுக்கு இடையே என்ன உறவு இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

இமான் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் பணம் கொடுத்து இந்த செய்திகளை தடுக்கப்பாக்கிறார். . சமூக வலைத்தளங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசுகிறவர்களுக்கு பெரும் தொகையும் கொடுக்க படுகிறது. இதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. தேவைப்பட்டால் அதை நான் வெளியிடுவேன் என்று அந்தணன் கூறியுள்ளார்.